2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பண்ணை வீதி உடைப்பெடுக்கும் அபாயம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளை இணைக்கும் ஒரு வீதியான பண்ணை வீதி உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தீவக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்துவரும் நிலையில் இவ் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது மேற்படி வீதிக்குக் குறுக்கே கடல்நீர் பாய்ந்த வண்ணம் உள்ளதுடன் காற்றும் அதிகளவாக வீசிக் கொண்டிருக்கின்றது.

இதனால் கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து வீதி குறுக்காக உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைத் தாக்கிய 'நிசாப்' புயலினால் இவ் வீதி பாரியளவு பாதிக்கப்பட்டதுடன் அதன் ஊடான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டு கடல் வழியாகவே போக்குவரத்துக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--