Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
2010ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் தெரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் காலிங்கராசா ஹரிச்சந்திரன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பசுமைக் கொள்கை திட்டத்தில் இம்மாணவனின் படைப்பு அமைந்திருந்த நிலையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியில் அறுநூறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டியின் அடிப்படையில் அதிலிருந்து ஐம்பது மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பின்னர் 20 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சியொன்று நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் போட்டியாளர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இப்படைப்புகளில் மேற்படி மாணவனின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற முறையில், எதிர்காலத்தில் வீடொன்றை அமைப்பதற்கான மாதிரித் திட்டம் சிறப்பிடம் பெற்றிருந்தது.
இவரின் திட்டமானது நாட்டுக்கு மிகவும் தேவையான மீளப் பயன்படுத்தக் கூடியதாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பசுமைக் கொள்கை கவனத்தில் எடுக்கப்பட்டே இவர் விருதுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
D.Mareeswari Wednesday, 15 December 2010 06:22 PM
ஆல் தி பெஸ்ட்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago