2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிக்கு பாராட்டு விழா

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் மனிதாபிமான, சமாதானப் பணிகளை மேற்கொண்டமைக்காக பிலிப்பைன்ஸின் அதி உயர் விருதான குஷி சமாதான விருது பெற்ற யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவை பாராட்டி கௌரவிக்கும் விழா தற்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.


யாழ் மக்களின் சார்பில் யாழ். கத்தோலிக்க அச்சக மண்டபத்தில் நடத்தப்படும் இப் பாராட்டு விழாவில் நல்லை ஆதினம் சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகள், யாழ். ஆயர் அதி. வண. தோமஸ் சௌந்தரநாயகம், தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆயர் அதி. வண. டி.எஸ். தியாகராஜா, யாழ். நாக விகாராதிபதி வண.  ஸ்ரீ விமலசிறி தேரர், யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் உதயன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .