2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

சங்கானைச் சூட்டுச் சம்பவம் : கைதான இரு சிப்பாய்கள் உட்பட நால்வர் விளக்கமறியலில்

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

சங்கானையில் கடந்த 11ஆம் திகதி ஆலயக் குருக்கள் மற்றும் அவரது இரு மகன்கள் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு படையினர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஆயுதங்களுடன் நுழைந்த குழு  மேற்கொண்ட தாக்குதலில் சங்கானை இலுப்பைத்தாழ்வு முருகமூர்த்தி ஆலய பிரதம குருவான நித்தியானந்தக் குருக்கள் மற்றும் அவரது இரு மகன்கள் காயமடைந்தனர்.

நித்தியானந்தக் குருக்கள் கடந்த புதன்கிழமை இரவு உயிரழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த மானிப்பாய் பொலிஸார் இரண்டு சிப்பாய்கள் உட்பட நாலவரை கைது செய்துள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--