2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் கிளை திறக்க இந்தியன் வங்கி திட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இந்தியன் வங்கியின் இரண்டாவது கிளையை யாழ்ப்பாணத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்திய எம். எஸ்.என் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்தியன் வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் ராஜிவ் ரிஷி சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விரைவாக இந்த கிளையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக இந்தியாவின் ரிசவ் வங்கியும், இலங்கை மத்திய வங்கியும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் வங்கி ஏற்கனவே கொழும்பில் ஒரு கிளையை கொண்டுள்ளது.

இந்த நிலையில் தனது இரண்டாவது இலங்கைக் கிளையை யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளது.

யாழ்ப்பாண பிராந்தியத்தில் சுயதொழிலை ஊக்குவிப்பதுடன், பெண்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளின் நோக்கில் இந்த வங்கிக் கிளை திறக்கப்படுவதாக அதன் பணிப்பாளர் ராஜிவ் ரிஷி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--