Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
முல்லைத்தீவு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பறவைக்காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகின்றது.
இதன் முதற் கட்டமாக வலயக் கல்வி உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
அடுத்ததாக செம்மலை மகாவித்தியாலய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு தொடர்ந்து முல்லைத்தீவு பொதுச்சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படுமென பொதுச் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்குரிய பணிப்புரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
எனினும் குறைந்தளவிலான மருந்தே கையிருப்பில் உள்ளதால் பொதுமக்களுக்கு இதனை வழங்குவதற்குப் போதாத நிலை காணப்படுகின்றது.
மருந்து மேலதிகமாகக் கிடைக்கப்பெறின் பொது மக்களுக்கும் இதனை வழங்கக்கூடியதாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago