2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

'மீள்குடியேற விரும்பும் முஸ்லிம்கள் தமது முன்னைய இருப்புக்களை உறுதிசெய்து கொண்டு விண்ணப்பிகவும்'

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கான இறுதி விண்ணப்ப திகதி இந்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை என யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் மௌலவி தெரிவித்தார்.

இது தொடர்பில் நான் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு வினவிய போது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்ததாக சுபியான் மௌலவி குறிப்பிட்டார்.

அத்துடன் மீள்குடியேற விரும்பும் மக்கள் தமது முன்னைய இருப்புக்களை உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்கும் சந்தர்பத்தில் அனைவருக்கும் உதவுவதற்கு தாம் தயாராகவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தம்மிடம் உறுதியளித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--