2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இக்கண்காட்சி உள்ளது: அமைச்சர் டக்ளஸ்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இக்கண்காட்சி அமைந்துள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா  தெரிவித்தார்.

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில், 'காலத்திற்கேற்ற உற்பத்திகள்' என்னும் கண்காட்சி யாழ். மத்திய கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதார
முயற்சிகளின்றி பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி; மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளார். இதன் வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் 'காலத்திற்கேற்ற உற்பத்தி;;' என்னும் உள்ளூர் உற்பத்தி
கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. இதன் நேக்கம் உள்ளூர் உற்பத்திகளை விற்பனை செய்வது மற்றும் நவீன வடிவமைப்புக்களை கொண்டு உற்பத்தி செய்தலாகுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .