2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக வர்த்தகர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைவு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, யாழ். வர்த்தகர் ஒருவரும் குடும்பஸ்தரும் (வயது 35) யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றிரவு சரணடைந்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் யாழ். குடாநாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடையும் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இவரை யாழ். மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ். பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட இவர், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--