2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யாழில் அநாவசிய நடமாட்டத்துக்கு தடை

A.P.Mathan   / 2011 ஜனவரி 11 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

 

யாழ்ப்பாணத்தில் இரவு 11 மணிக்கு பின்னர் அநாவசியமாக நடமாடுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என யாழ். பொலிஸ் அத்தியட்சகர் நமீல் பத்மகே கூறியுள்ளார்.

யாழ். நகரில் தொடரும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே இந்நடைமுறை இன்றுமுதல் அமல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இரவு 11 மணியின் பின்னர் யாழ். நகர வீதிகளில் குழுக்களாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் நடமாடுபவர்களை கைதுசெய்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X