2025 ஜூலை 03, வியாழக்கிழமை

யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்த குடும்பஸ்தரை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்த குடும்பஸ்தரை நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சங்கானையைச் சேர்ந்த (வயது 32) குடும்பஸ்தர் ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு சரணடைந்துள்ளார். சரணடைந்த இவரை யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு
அதிகாரிகள்,  பொலிஸாரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஒப்படைத்தனர்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் இவர்  ஆஜர்படுத்தப்பட்டபோது விசாரணை நடத்திய யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா, குறித்த நபரை  எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீதிமன்றப் பாதுகாப்புடன் சிறைச்சாலையில் வைக்குமாறும் யாழ்.; போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் யாழ். பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .