2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

யாழ். மாவட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பசுப்பால் வழங்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். மாவட்டத்திலுள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பசுப்பால் வழங்குவது தொடர்பிலும் பசுப்பால் உற்பத்திப் பயன்பாடு தொடர்பிலுமான கலந்துரையாடலொன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்றது.


யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் சீரான முறையில் பசுப்பால் விநியோகம் செய்தல், கால்நடை வளர்ப்போர் எவ்வகையிலும் பாதிக்கப்படாது அவர்கள் வழங்கும் பசுப்;பாலை சேகரித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.


இன்று வெள்ளிக்கிழமை முதல் மாவட்டம் தழுவிய ரீதியில் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பசுப்பால் தினமும் வழங்குவதற்கும் சமுர்த்தி யாழ்கோ கால்நடை வளர்ப்போர் சங்கங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை பிரதேச செயலாளர்கள் ஒருங்கிணைத்து கண்காணிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.


யாழ். அரசாங்க அதிபர் பணிமனையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாவட்ட அனைத்து பிரதேச செயலாளர்கள், பால் உற்பத்தி அமைப்புக்களான யாழ்க்கோ மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--