2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வடக்கில் கல்வி கற்ற மருத்துவர்கள் அப்பகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்: சுகாதார அமைச்சர்

Super User   / 2011 ஜனவரி 21 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட புகுதியில் கல்வி கற்று வைத்தியதுறைக்கு வந்தவர்கள் அப்பகுதியில் மக்களுக்கு சேவையற்ற வேண்டும். அவர்கள் வெளி நாடுகளுக்குச் செல்வதையோ தென்பகுதியில் சேவையாற்ற விரும்புவதையோ தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

யாழ் .போதனா வைத்தியாலையில் ஜப்பான் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் கொனியோ டகாஹசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவானி பசுபதி ராஜா, யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தென்பகுதியில் பணியாற்றுவதற்கு தென் பகுதி வைத்தியர்கள் இருக்கிறார்கள். வட பகுதி மக்களை காப்பற்றுவதற்கு நீங்கள் தான் இருக்கிறீர்கள். வட பகுதி வைத்தியரகள் தங்களது சொந்த மண்ணை நேசித்து அப்பகுதி மக்களுக்கு வைத்திய சேவையாற்ற முன்வர வேண்டும்.
வடக்கில் ஆயுதம் தூக்கிய கரங்கள் இன்று பேனா முனையில் தமது கல்வியை தொடர்கிறது. இந்த கல்வியின் மூலம் எதிர்காலத்தில் வடபகுதியை கட்டியெழுப்பக்கூடிய பெரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

இன்னும் 5 வருடங்களில் யாழ் போதான வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு உயரத்துவதற்கு அரசாங்கம் முயற்சியெடுத்துக்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு உதவிகள் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கிறது. அந்த உதவிகளை வைத்துக்கொண்டு நாம் யாழ்ப்பாணத்தை கட்டிnழுப்புவதற்கு முயற்சிக்கின்றோம். விரைவில் யாழ்பாணத்தில் வைத்திய துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் ஏனென்றால் அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மையுள்ள  வைத்தியர்கள். யாழ்பாணத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

அரசு வடக்கு தெற்கு என்று பிரித்துப் பார்க்கவில்லை. ஒரே மாதிரியான கல்வியைக் கொடுத்து அம்மக்களை சமூகத்தில் நல்ல பிரஜைகளாக உருவாக்குகிறது.

வடபகுதி பெற்றோர்களிடம் ஒரேயோரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் உங்களது பிள்ளைகளை . குறிப்பாக வைத்தியதுறை சார்ந்தவர்களை  கல்வி கற்ற இடத்திலேயே சேவையாற்ற பணியுங்கள்' என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X