2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்பனை செய்த இராணுவப் பொலிஸுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  இராணுவப் பொலிஸார் ஒருவரை எதிர்வரும் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை  சாவகச்சேரி பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை வீட்டில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே,  எதிர்வரும் இரண்டாம்  திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விடுமுறைக்காக வெளிமாவட்டத்திற்குச் சென்று வந்த இராணுவப் பொலிஸ் ஒருவர் சாவகச்சேரி நகரப்பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்தவேளை சாவகச்சேரிப் பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது 500 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 


  Comments - 0

  • Ramasamy Ramesh Wednesday, 26 January 2011 04:08 PM

    இராணுவத்தினர் தான் இப்போது சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த விடயம் ஏனோ அரசுக்கு இன்னும் புரியவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X