2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழில் ஹோட்டல் பாடசாலை ஆரம்பிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் பாடசாலையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். பிராந்திய இணைப்பாளர் இரா. அகிலன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் அத்துறையில் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கும் ஹோட்டல் பாடசாலையில் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கற்கைநெறிகள் பகுதிநேர கற்கை நெறியாகவும் முழு நேர கற்கைநெறியாகவும் நடத்தப்படவிருப்பதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை யாழ். பிராந்திய இணைப்பாளர் இரா. அகிலன் தெரிவித்துள்ளார்.

கற்கைநெறிகளாக ஹோட்டல் பராமரிப்பாளர,; ஹோட்டல் உபசரணையாளர், ஹோட்டல் உணவு தயாரிப்பாளர் ஆகியவற்றுக்கான கற்றைநெறிகளே ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாடசாலையை விட்டு வெளியேறிய இளைஞர், யுவதிகள் இக்கற்கைநெறியில் இணைந்து கொள்ளலாமென்பதுடன்,; தமது விண்ணப்பங்களை இணைப்பாளர,; இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை, இல.375 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--