Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
குடும்பத் தகராறு காரணமாக நஞ்சுத் திரவகம் அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முருகன் தயாபரன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த குடும்பஸ்தரின் தந்தையார் மரணமடைந்து அவரது ஜந்தாம் நாள் கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றன. இதன்போது, வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றதாகவும் நீண்டு நேரமாகியும் வீடு திரும்பததால் அவரது கையடக்க தொலைபேசிக்கு உறவினர்கள் தொடர்புகொண்டபோது தான் சுடலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சுடலைக்குச் சென்ற உறவினர்களிடம் தான் மருந்து அருந்தியதாக அவர் தெரிவித்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
14 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
19 minute ago
22 minute ago