2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பல கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்டவர் பொலிஸாரினால் கைது

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணம் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் மல்லாகத்தில் தனது காதலியின் வீட்டில் இருந்தபோது இரகசிய பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற சைக்கிள் களவுகள், வழிப்பறிகள் மற்றும் வீதியால் செல்லும் பெண்களிடம் நகைகள் பறித்தல் என பலவேறு குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையில் சென்ற பொலிஸ்குழுவினருடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய இரகசிய பொலிஸாரும் இணைந்து இவரை கைதுசெய்து விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சந்தேகநபர் ஏற்கனவே பல தடவைகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--