2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் எமது வாழ்வாதாரத்தில் பாதிப்பு: யாழ். மீனவர்கள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் தமது வாழ்வாதாரம் பாதிப்படைந்து தாம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வடமராட்சி மற்றும் மாதகல் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை காலை அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து தமது நிலைமையை மீனவ சங்கப் பிரதிநிதிகள் விளக்கினர்.

யாழ். மாவட்ட மீனவர்களுடைய பல்லாயிரக்கணக்கான கடற்தொழில் உபகரணங்கள் இந்திய மீனவர்களினால் கடந்த காலம் தொட்டு இன்று வரை அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடருமானால் கடல்த் தொழிலையே நம்பி வாழும்; எமது நிலை வறுமைக் கோட்டுக்கு வருமென்று தாம் அஞ்சுவதுடன்,
இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டும் படலத்தை தடுத்து நிறுத்தி எமது வாழ்வியலை மேம்படுத்துமாறும் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களது கோரிக்கையை செவிமடுத்த அரச அதிபர் இமெல்டா சுகுமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து விரைவில் இந்திய மீனவர்களது  பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பதாகவும் மீனவப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க வடமராட்சி மீனவ சங்க சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை, சக்கோட்டை பங்குத்தந்தை அருட்பணி அகஸ்ரின், மாதகல் கடற்றொழில் சங்கப்பிரதிநிதிகள், மாதகல் பங்குத்தந்தை அருட்பணி ஆனந்தகுமார் ஆகியோர் இச் சந்திப்பில்  கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .