2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பார்வதி அம்மாளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

Super User   / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்றகாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையிலுள்ள பல இடங்களில் துக்கம் தெரிவிக்கும் முகமாக கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

பார்வதி அம்மாளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் தழிழர்கள் வருகை தரவுள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் வைத்து பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி
செலுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--