Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
கண்ணிவெடி மற்றும் மிதிவெடிகள் அபாயமுள்ள பிரதேசங்களில் 60 வீதமான இடங்களில் அவை அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களைப் போலல்லாது துரிதகதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள 15 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமரக்கூடியதாக உள்ளபோதும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக சில மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
01 Jan 2026