2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

யாழ். நகரின் மையப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தத் தடை; மாநகரசபை நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நகரின் முக்கிய பகுதிகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களை நிறுத்தக்கூடாதென்பதுடன்,  தெருவோரக் கடைகளை அப்புறப்படுத்துமாறும் கூறி விசேட  அறிவித்தலொன்று  யாழ். மாநகரசபை ஆணையாளரால் நேற்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரில் ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, ஸ்ரான்லி வீதி, மின்சாரநிலைய வீதி ஆகிய வீதிகளில் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் இதர வாகனங்கள் நிறுத்தப்படக்கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.  
சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களை மரக்கறிச்சந்தை, மின்சாரநிலைய வீதி ஆகிய இடங்களிலுள்ள சைக்கிள் பாதுகாப்பு நிலையங்களில் நிறுத்த வேண்டுமெனவும் சிறியரக வாகனங்கள் யாவும் பண்ணையிலுள்ள தனியார் பஸ் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .