2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழில் பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலகம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனை அபிவிருத்திச் சபையின் தலைமைக் காரியாலயம் நேற்று செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கு உரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

பனைசார் வளங்களைப் பெருக்குவது மட்டுமன்றி எதிர்காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்திலேயே உச்சகட்ட பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
 
பனைசார் வளங்களை அதிகரிப்பதும் வளர்த்தெடுப்பதும் மட்டுமன்றி அதுசார்ந்து வாழ்கின்ற குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பனை அபிவிருத்திச் சபை முழுமையாக உழைக்க வேண்டும்.  எதிர்காலத்திலும்; பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்திலேயே உச்சக்கட்ட பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் கொழும்பில் இயங்க வேண்டியிருந்தது. இச்சங்கம் தற்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் அதன் பணிகளை ஆரம்பித்துள்ளதுடன், கொழும்பிலுள்ள காரியாலயம் இனிமேல் யாழ்ப்பாணத்தின் கிளைக் காரியாலயமாக இயங்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--