2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

யாழ். மீனவர்கள் அகிம்சை வழியை கைவிடக்கூடும்: தவரட்ணம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா மாதகல் கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாக மாதகல் மீனவர்களும் மாதகல் கடற்றொழில் சங்கத் தலைவர் இராஜசிங்கமும் இன்று தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்திய மீனவர்களுடைய 6இற்கு மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து தமது 8 லட்சத்திற்கு மேல் பெறுமதியான வலைகளை அறுத்தெறிந்ததாக கடற்றொழில் வடமாகாண சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து அவரிடம் தெடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது-

'இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டும் காணாததுபோல் இருந்துவிட முடியாது. இந்தநிலை தொடருமானால் வடமாகாண கடற்தொழிலாளர்கள் அகிம்சை வழிகளை தெரிவு செய்யாமல் வன்முறையில் இறங்க வேண்டிய கட்டாயத் தேவை எழும்' என வடமாகாண சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய மீன்பிடி வள்ளங்களுடன் மீனவர்களைக் கைது செய்து எதிர்ப்பை வெளியிட்டபோதிலும் அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்கறையற்று இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--