Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பனை அபிவிருத்தி சபையின் எதிர்கால செயற்திட்டங்களை முன்னெடுக்கும் முகமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 5 உழவு இயந்திரங்களை இன்று வழங்கினார்.
யாழ் வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை முன்பாக இந்த உழவு இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. உழவு இயந்திரங்களளை பனை அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் லோகநாதனிடம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி கையளித்தார்.
இதன் மூலம் பனை அபிவிருத்தி சபையின் எதிர்கால செயற்திட்டங்களை மேலும் விருத்தி செய்வதற்கு ஏதுவாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ் மாவட்ட அரச அதிபர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago