2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ். மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாணவர்கள் மத்தியில் அருகிவரும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிங்கப்பூர் இன்ரநெஷனல் பவுண்டேசன் அமைப்பு யாழ். பொதுநூலக சிறுவர் பகுதியில் பயிற்சிப்பட்டறைகளை நேற்று வியாழக்கிழமை நடத்தியுள்ளது.

மாணவர்கள் மத்தியில் கிரகிக்கும் சக்தியை மேம்படுத்துவதற்காக கதை சொல்லுதல், சரியான முறையில் உச்சரிக்கும் பழக்கத்தை மேம்படுத்துதல், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் போன்ற பயிற்சிகள்  இப்பயிற்சிப்பட்டறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இப்பயிற்சிப்பட்டறையில் யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, சிங்கப்பூர் இன்ரநெஷனல் பவுண்டேசன் நிறுவன பிரதிநிதிகள், பிரதம நூலகர் தனபாலசிங்கம், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--