Freelancer / 2025 நவம்பர் 26 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
டில்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நெதன்யாகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா சென்றிருந்தார்.
பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் வகையில் புதிய திகதியை கோருவார் எனத் தெரிகிறது. நெதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3 ஆவது முறையாகும்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி நெதன்யாகு இந்தியா வருவதற்கு இருந்தார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17 ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை அவர் ரத்து செய்தார்.
அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார். (a)
44 minute ago
2 hours ago
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
25 Nov 2025