2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

'மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?' கலந்தாய்வரங்கு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்தள்ள யாழ். அமெரிக்கத் தகவல் கூடத்தில் "மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?''என்ற கருப்பொருளில் பொதுக் கலந்தாய்வரங்கொன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம்  திகதி நடைபெறவுள்ளது.

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வரங்கில், விரிவுரைகளை கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் லியோனல் மண்டே வளவாளராக கலந்துகொண்டு வழங்கவுள்ளார்.

இக்கலந்தாய்வரங்கில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களென பங்குபற்றலாமென யாழ். அமெரிக்கத் தகவல் கூடத்தின் இணைப்பாளர் ஜெறின் கிருசாந்தி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .