2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

உடுவில் மகளிர் கல்லூரியில் சுழலும் சொல்லாடு களம்

Kogilavani   / 2011 ஜூன் 12 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

உடுவில் மகளிர் கல்லூரித் தமிழ் மன்றம் நடத்தும் கம்பராமாயணத்தில் வாலி வதம் எனும் கருப்பொருளில் சுழலும் சொற்போர் நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர் ஷிராணி மில்ஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், தொடக்கவுரையை கல்லூரியின் தமிழ் மன்றக் காப்பாளர் திருமதி சுனித்தா ஜெபரட்ணம் வழங்குவார்.

வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா புதிய உயர்கல்லூரி விரிவுரையாளர் நா.குழந்தை ஆகியோர் நோக்குநர்களாகக் கலந்து கொண்டு வாதிகளைக் குறுக்கு விசாரணை செய்வர். நிகழ்வின் நடுவராக கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் செயற்படுவார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .