2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மார்பகப்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் மார்பகப்புற்று நோய்க்கு உள்ளாகும் பெண்களின் தொகை அதிகரித்திருப்பதாகவும் இதனால் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் தொகையும் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு இன்று திங்கள் கிழமை விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தினமும் மார்பகப்புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளான பெண்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் குடும்பப் பெண்களில் 38 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் அதிகளவில் மார்பகப்புற்று நோய்க்கு உள்ளாகியிருப்பதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த நோய்த்தாக்கமுள்ள பெண்கள் உடனடியாக மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ளுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை புற்று நோய் சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .