2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அமிர்தலிங்கத்தின் சிரார்த்த தின அஞ்சலி

Super User   / 2011 ஜூலை 14 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரின் 23ஆவது சிரார்த்த தின அஞ்சலி தமிழர் விடுதலை கூட்டணியின் ஊடகச் செயலாளர் கஐன் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

கட்சியின் யாழ் மாவட்ட தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகை சுடரினை உறுப்பினர் மதியழகராசா, முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செல்லையா விஐயரட்னம் ஆகியோர் ஏற்றிவைக்க கட்சியின் பிரமுகர்களும் தொண்டர்களும் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இரங்கலுரைகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--