2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யாழ். வடமராட்சியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் குடிநீர்த்திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 15 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வடமராட்சிப் பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் குடிநீர்த்திட்டமொன்றை தேசிய நீர்வடிகால் அமைப்பு சபையினர் ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகள் தோறும்; 50 வீடுகளுக்கு சென்று அக்கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான படிவங்களில் விபரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

வல்லிபுரக் கோவிலிலிருந்து வடமராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்கும் பாரிய திட்டமொன்று ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X