2021 மே 06, வியாழக்கிழமை

யாழில் மிகப்பிரமாண்ட திரையரங்குகள், கடைத் தொகுதிகள் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நகரில் பொழுதுபோக்கு மற்றும் கடைத்தெரு கொண்ட கட்டிடத்தொகுதியில் 1,200 பேர் ஒன்றாகச் சேர்ந்து திரைப்படம் பார்க்கக்கூடிய வகையில் 03 திரையரங்குகள் நிறுவப்படவுள்ளதாக கொழும்பு காகில்ஸ் நிறுவன முகாமையாளர் இம்தியாஸ் வஹிட் தெரிவித்துள்ளார்

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்படும் மிகப்பெரிய பொழுதுபோக்கு மற்றும்  கடைத்தெரு கொண்ட கட்டிடத்தொகுதி இதுவாகும்.
யாழ்ப்பாணத்தில் பல கடைத்தெருக்கள் இருந்தபோதும் பொழுதுபோக்கிற்கான ஒரு இடமில்லாததால் அத்தேவையை நிறைவு செய்வதற்காக இக்கட்டிடத்தொகுதி அமைக்கப்படுகிறதெனவும் அவர் கூறினார்.

யுத்தம் நிறைவுக்கு வந்ததும் யாழ்ப்பாணத்தில் வர்த்தக நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்று வருவதால் வங்கிகள் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் அங்கு தமது கிளைகளை ஸ்தாபித்து வருகின்றன. காகில்ஸ் நிறுவனம் இவ்வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபா பணத்தை முதலிடுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இக்கருத்திட்டம் 16 மாதங்களுக்குள் நிறைவு செய்யக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இம்தியாஸ் வஹிட்  தெரிவித்தார்.

இக்கட்டிடத் தொகுதிக்குள் 03 திரையரங்குகளும் காகில்ஸ் வியாபார நிலையமொன்றுடன் 20 முதல் 25 வரையிலான பல கடைகளும் இதற்குள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .