2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'இந்தியாவில் இருக்கும் யாழ்ப்பாண மக்கள் கோரினால் முன்னுரிமை அடிப்படையில் மீளக்குடியேற்றப்படுவார்கள்'

Super User   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்தியாவில் இருக்கும் யாழ்ப்பாண மக்கள் மீளக்குடியமர்த்துமாறு கோரினால் முன்னுரிமை அடிப்படையில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவிததார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இதுவரை யாழ். குடா நாட்டில் 360,114 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் 11,048 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த 80,000  ஆயிரம் பேர் இந்திய நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானேர் யாழில் மீளக்குடியேற விரும்புவதாக கடிதம் மூலம் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.


  Comments - 0

  • neethan Tuesday, 27 September 2011 07:27 PM

    அம்மணி மீளக்குடியமர்வு, இந்திய அரசின் நிதி உதவி மூலமா? இலங்கை அரசின் நிதி மூலமா? அமுல்படுத்தப்படும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X