2021 மே 06, வியாழக்கிழமை

யாழ். மாவட்ட சுகநலவார ஒருங்கிணைப்புக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட அரச, அரசசார்பற்ற நிறுவனத் தலைவர்களுக்கான சுகநலவார ஒருங்கிணைப்புக் கூட்டம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ளது.

யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 3 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் சுகநலவார செயற்பாடுகளை அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. 

அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சுகநலவார செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான கூட்டம் பிரதேச செயலாளர்களின் தலைமையில் அந்தந்தப் பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .