2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

யாழில் தேசிய சுகநல வார அங்குரார்ப்பண வைபவம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.இரவீந்திரன் அவர்களால் தேசிய சுகநல வாரம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இன்று திங்கள் தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரையான இந்த வாரப்பகுதியில் அனைத்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் பல்வேறு சுகநல மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--