2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தேசிய சுகநல தினத்தையொட்டிய இரத்ததான நிகழ்வு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

 

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் அனைத்து குருதி வகைகளுக்கும் அவசர தேவை ஏற்பட்டுள்ளது. காயமடைந்து குருதியிழப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள், சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்படும் நோயாளர்கள், கர்ப்பவதிகள், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் குருதிக் கொடையாளர்கள் வழங்கும் குருதியினால் உயிர்காக்கப்படுபவர்கள்.

எனவே, நாளை மறுதினம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தேசிய சுகநல வாரத்தையொட்டி இரத்ததான நிகழ்வுகள் மூன்று இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இது யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் பிரதேசங்களுக்குப் பொதுவாக ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலும் வடமராட்சியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை (மந்திகை) மற்றும் தென்மராட்சியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் ஒழுங்கு செய்யப்பட்டள்ளது.

இதில் உயிர்காக்கும் உணர்வுள்ள சமூக நலன்விரும்பிகள், சுகாதாரப் பணியாளர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், இளைஞரமைப்புகள், சமய, சமூக பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் பங்குபற்றி குருதிக் கொடை வழங்க முன்வருமாறு யாழ்.பிராந்திய சுகாதார வேவைகள் பணிமனை கேட்டக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X