2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இரத்ததான முகாம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தேசிய சுகநல வாரத்தையொட்டி இரத்ததான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சுகாதாரப் பணியாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், இராணுவத்தினர், பொலிஸாரென உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 140 பேரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 128 பேரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 65 பேருமாக மொத்தம் 333 பேர் இரத்ததானம் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--