2025 நவம்பர் 24, திங்கட்கிழமை

நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்

Editorial   / 2025 நவம்பர் 24 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைஜீரியாவின் வட-மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 303  மாணவர்களில் 50 பேர் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் இருப்பதாக பாடசாலை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

10 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தனித்தனியாக தப்பிச் சென்றதாக நைஜீரியாவின் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவரும் பாடசாலையின் உரிமையாளருமான புனித புலஸ் தௌவா யோஹன்னா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 253 பாடசாலை மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இன்னும் கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் ஆயுதக் குழுவினா் மற்றும் பயங்கரவாதிகளால் மாணவ மாணவிகள் பிணைத் தொகைக்காக கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.

கடந்த 2014-ஆம் ஆண்டில் சிபோக் நகரில் இருந்து 276 பாடசாலை மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த மாணவிகளில் ஏராளமானவா்கள் விடுவிக்கப்பட்டாலும், 80 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X