2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வடபிராந்திய யாழ். சாலை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய யாழ். சாலை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது மாதாந்தக் கொடுப்பனவை உரிய நேரத்தில் வழங்குமாறு கோரி அவர்கள் இந்தப் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவிருந்தனர்.

இவ்வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து அறிந்துகொண்ட தொழில்த் திணைக்களத்தின் யாழ். அலுவலகம் உடனடியாக இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டோருடன்  கலந்துரையாடியதாக வடமாகாணப் பிரதித் தொழில் ஆணையாளர் கே.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக கூட்டம் கோண்டாவில் டிப்போவில் நடைபெற்றதாகவும் கே.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சபை ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உடன் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.  
ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை உரிய முறைப்படி தீர்க்கப்பட்டமையால் அவர்கள் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக  கே.கனகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதித் தொழில் ஆணையாளர் கே.கனகேஸ்வரன் வடபிராந்திய போக்குவரத்துச்சபையின் பொதுமுகாமையாளர் கே.கேதீசன், தொழில்த் திணைக்கள யாழ். உதவி ஆணையாளர் நீலலோஜினி ஜெகதீஸ்வரன், மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலக இணைப்பதிகாரி வி.கனகராஜ் மற்றும் போக்குவரத்துச்சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--