2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சண்டிலிப்பாய் - சங்கானை எல்லை மாற்றம் தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலுமுள்ள எல்லைகளை மாற்றி சீர்செய்யும் முகமாக கூடிய கூட்டம் இறுதியில் எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில்  ஒரு குழுவை அமைத்து முடிவுவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான மு.சந்திரகுமார் தலைமையில் கூடியது.இதன்போது சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் சங்கானைப் பிரதேச செயலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள எல்லைகளை மாற்றம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சங்கானைப் பிரதேச மக்கள் சண்டிலிப்பாய் பிரதேசத்துடன் சில கிராம எல்லைகளை மாற்றி மக்களின் பகுதிகளை மாற்ற எடுத்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடமும் பொதுவமைப்புக்களிடமிருந்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் உரிய முடிவுகளை பெற்று மாற்றங்களை மேற்கொள்வதற்கு வசதியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் வலி. மேற்கு மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச செயலாளர்கள், உரிய பகுதிகளின் கிராம அலுவலர்கள்,  பிரதேசசபைகளின் பிரதிநிதிகள், தவிசாளர்கள், அரசாங்க அதிபர் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதி ஆகியோர்களைக் கொண்ட குழு உரிய பகுதி பொதுமக்களைச் சந்தித்து பெரும்பான்மை மக்களின் முடிவுக்கேற்ப எல்லை மாற்றங்களை செய்வதெனவும் அவ்வாறு பொதுமக்கள் உடன்படாத பட்சத்தில் அதனைக் கைவிடுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X