2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பங்கேற்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நடமாடும் சேவையில் குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இந்த நடமாடும் சேவையில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் நான்கு பேருக்கு நடப்பதற்கான ஆதாரக் கருவிகளும் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டன.   அத்துடன், யாழ். வைத்தியசாலைகளுக்கு மின்சார கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, இந்த நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தலுவத்த தெரிவிக்கையில்,

'உங்கள் பண்பாட்டையும் கலாசாரத்தையும் உங்களையும் பாதுகாப்பதற்காக பொலிஸாராகிய நாமுள்ளோம்.  உங்களின் பிரச்சினைகளை எங்களிடம் முறையிடுங்கள். அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை நாங்கள் மேற்கொள்வோம்.
யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக பொலிஸார் எப்போதும் தயாராகவுள்ள அதேவேளை,  மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தினால் நீங்கள் பாதிப்படைந்தீர்கள். ஆனால், இன்று நீங்கள் அவ்வாறில்லை. மிகவும் சந்தோசமாகவுள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் மிகவும் நல்ல உறவு நிலவுகிறது. மக்களுக்கு சிறப்பான சேவையாற்றுகின்றோமென நினைக்கும்போது எமது மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது' என்றார்

பொலிஸாரின் மாபெரும் நடமாடும் சேவை நிகழ்வில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ, யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா, யாழ். மாநகர முதல்வர், சர்வமதத் தலைவர்கள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், பெதுமக்களெனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--