2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை மாணவர் பேரவை தலைவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

Super User   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிஷன், கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் சுப்ரமணியம் தவபாலசிங்கம் இனந்தெரியாத நபர்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணியளவில் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கந்தர் மடம், பழம் வீதி சந்தியில் வைத்து சுமார் 10 பேர் கொண்ட குழுவினரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும்  தனி நாடு தேவையா என  கேட்டு தன்னை தாக்கியதாகவும் பேரவை தலைவர் சுப்ரமணியம் தவபாலசிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் தமிழிலும் சிங்களத்திலும் உரையாடிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--