2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சாவகச்சேரி இந்துவின் திரைப்பட வெளியீடு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

அரிச்சந்திர மயானகாண்டம் எனும் இசை நாடகத்தினை சத்தியமே ஜெயம் எனும் பெயரில் ஒரு மணிநேர திரைப்படமாக  நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சாவகச்சேரி இந்துக்கல்லூரி வெளியிட்டு வைக்கவுள்ளது.

உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு சம்பந்தமுடையதான இப்படம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் அ.கைலாயபிள்ளையின்  தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இவ்வெளியீட்டு நிகழ்வுக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ந.சண்முகலிங்கம் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக மேலதிக கல்விப்பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணனும்  கௌரவ விருந்தினர்களாக வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆசிரியை கயல்விழி சுரியகுமாரனும் யாழ் பல்கழைக்கழக இசை விரிவுரையாளர் பொன் ஸ்ரீவாமதேவனும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப்படத்திற்கு இசை நாடக நெறியாள்கையினை கு.ஜோதிரட்ணராஜாவும் திரை நெறியாள்கையை தி.தர்மலிங்கமும்  ஒளிப்படவாக்கத்தினை சிவராஜா தர்மலிங்கமும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--