Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 16 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ் மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பில் வயது வந்தவர்களை இணைத்துக்கொள்வது மற்றும் வாக்காளர் இடாப்பில் அதிக எண்ணிக்கையான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கிறின் கிறாஸ் விடுதியில் பவ்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட அரச சார்பற்றி நிறுவனங்களின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தேர்தல் திணைக்கள் பிரதி ஆணையாளர் மொஹமட், யாழ் மாவட்ட தேர்தல் ஆணையாளர் குகநாதன், கிளிநொச்சி மாவட்ட தேர்தல் ஆணையாளர் கருணாநிதி, வவுனியா மாவட்ட தேர்தல் ஆணையாளர் சுதாகர் உட்பட கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஸ்ரீதரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கனகராஜ், யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கடந்தாண்டு பல ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பலர் இலங்கைக்கு வெளியே தற்காலிகமாக தொழில் மற்றும் கல்வி நிமித்தம் சென்றவர்களாவர். இவர்களுடைய பெயர்களை மீண்டும் இணைப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமட் கருத்து தெரிவிக்கையில், 'இப்பிரச்சினை தொடர்பில் உரிய முறையில் விசாரித்து பதிவுகளை வீடு வீடாகச்சென்று பதிவு செய்திருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கிராம அலுவலர்களுடையது.
இதனை உரிய முறையில் வீடு வீடாகச்சென்று பதிவு செய்யாது தவற விட்டு இருந்தால் அதற்குப் பொறுப்பு கிராம அலுவலர்கள் ஆகும். அத்தகைய கிராம அலுவலர்கள் மீது ஆறு மாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனையோ அன்றி 500 ரூபா அபராதமோ இவைகள் இரண்டையும் கூட விதிக்க முடியும்.
தற்போது கோரிக்கைப் படிவத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை ஏற்று பதியமுடியும். இதற்கு உரிய அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற சமூக ஆர்வலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025