Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 16 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
'வடக்கு, கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பில் வயது வந்தவர்களை இணைத்துக்கொள்வது மற்றும் வாக்காளர் இடாப்பில் அதிக எண்ணிக்கையான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம், கிறின் கிறாஸ் விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீதரன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்வதற்கான உரிமை காணப்படுகின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வதினால் தமது பெயர்களை பதிவு செய்ய முடியாது என்ற எண்ணத்திலோ அன்றி வெளிநாட்டில் இருக்கும் நாம் வாக்களிக்க முடியாது என்றோ கவனயீனமாக இருந்து விடாது தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆகையினால் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மை வாக்காளர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, இலங்கை தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்தைப் பார்த்தோ அன்றி உங்களுடைய உறவுகள் நண்பர்கள் மூலமாகவோ வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் 30ஆம் திகதியுடன் வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தி அடையவுள்ளமையால் காலம் பிந்தாது உடனடியாக பெயர்களை பதிய முன்வர வேண்டும். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களும் கூட கடந்த காலத்தில் தமது பெயர்களை பதிவு செய்யாது விட்டு இருந்தாலோ அன்றி தவறவிட்டு இருந்தாலோ உடனடியாக தமது பெயர்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
16 minute ago
52 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
52 minute ago
56 minute ago