Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் வடகடல் மீனவர்களின் பிரச்சினையில் மௌனம் சாதிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்
வடமாகாண சமாசத் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
'கடந்த 30 வருடங்களாக ஈழத்தமிழர்களுடைய கடல் வளங்களை இந்திய மீனவர்களே அள்ளிச் சென்றனர். நாங்கள் இன்று சுதந்திரமாக கடற்றொழில் செய்ய முடியாதவாறு வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பதற்கு முக்கிய காரணமானவர்கள் இந்திய மீனவர்களே.
எங்களின் வளங்களை அள்ளிச் சென்றால் நாங்கள் எங்கு சென்று தொழில் செய்ய முடியும். எங்களை சுதந்திரமாக தொழில் செய்ய விடுங்கள். வடகடல் மீனவர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்.
தமிழகத்திலுள்ள தழிழர்கள் ஈழத்தமிழ் மக்கள் மீது உண்மையான சகோரத்துவத்துடன் இருந்தால் எங்கள் கடல் எல்லைகளுக்குள் அத்துமீறி நுழைவதை நிறுத்துங்கள். நாங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டாவது நீங்கள் எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்வதை நிறுத்துங்கள்' என்றார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago