2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மீளக்குடியேறி ஒரு வருடமாகியும் அடிப்படை வசதிகளின்றியுள்ள பூம்புகார் மக்கள்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 22 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழில் மீளக்குடியமர்ந்து ஒருவருடமாகியுள்ள பூம்புகார் கிரம மக்கள் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் அப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

யுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் 20 வருடங்களின் பின்பு கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் மக்கள் இன்னமும் ஓலைக்குடிசைக்குள்ளும் தாப்பாள் வீடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிப்பதற்கு கூட குடிநீர் எதுவும் இல்லை, மின்சார வசதிகள், புனரமைக்கப்படத வீதிகள், மலசலகூட வசதிகள் இல்லை, இறைக்கப்படாத கிணறுகள் என எந்த வித வசதிகளும் அற்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

யாழ். பூம்புகார் கிராம மக்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு கூட பாடசாலைகள் இல்லை. இடிந்த கட்டிடத்திற்கு மத்தியில் தரப்பாளின் கீழும் மரநிழல்களில் கல்வி கற்று வருகின்றனர்

மீளக்குடியமர்ந்த இந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இவர்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்த மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு பூம்புகார் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .