2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

தனித்திருந்த வயோதிபப் பெண்ணைக் கட்டிவைத்துவிட்டு தங்கநகைகள் கொள்ளை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 23 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹர்சன்)

யாழ்ப்பாணம், கச்சேரியடி முதலியார் வீதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணொருவரைக் கட்டிவைத்துவிட்டு சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று  நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ். கச்சேரியடி முதலியார் வீதியிலுள்ள வீட்டில் மேற்படி வயோதிபப் பெண்ணும் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் அவரது மகளும் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் வீட்டில் எவரும் இல்லாதபோது குறித்த வீட்டிற்குச் மூவர் சென்றுள்ளனர். இவர்கள்  தமது வீட்டிற்கு மாபிள் பதிக்க வேண்டியுள்ளதாகவும் குறித்த வீட்டில் மாபிள் பதிக்கப்பட்ட நிலையில் அதனை பார்வையிடப்போவதாகவும் கூறி உள்நுழைந்துள்ளனர்.

வீட்டினுள் நுழைந்த இந்த மூவரும் மேற்படி வயோதிபப்  பெண்ணின் வாயினுள் துணியை அடைந்து அவரைக் கட்டிவைத்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்கநகைகளையும் வீட்டிலிருந்த தங்கநகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட  மேற்படி  வயோதிபப்பெண் யாழ். போதனா  வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .