Menaka Mookandi / 2011 நவம்பர் 23 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் அரச காணிகள் எவையும் தனியாருக்கு விற்கப்படமாட்டாது என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
யாழில் முதலீடுகளைச் செய்வதற்காக பல்தேசிய கம்பனிகள் யாழ்.மாவட்டத்தில் முனைப்பைக் கொண்டுள்ளதாகவும் அரச காணிகள் இருந்தால் தரும்படி தனக்கு இம்மாதத்தில் மாத்திரம் 55 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் தனியாருக்கு காணிகளை வழங்குவது தொடர்பாக காணியமைச்சிடம் இருந்து உத்தியோகபூர்வமான எந்தவித அறிவித்தலும் வரவில்லை எனவும் யாழில் தனியார் கம்பனிகளுக்கு காணிவழங்க முடியாது எனவும் கூறினார்.
காணிகளைக் கொள்வனவு செய்வதற்கு தென்பகுதி வர்த்தகர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
49 minute ago
3 hours ago
Kethis Wednesday, 23 November 2011 09:38 PM
உங்க கையில என்னம்மா இருக்கு? மேலிடத்து உத்தரவு வந்தால்...
Reply : 0 0
j.sanjai Wednesday, 23 November 2011 09:53 PM
யாழ்ப்பாணத்தை சீரழிவுகளில் இருந்து காப்பாற்றுவதற்கு நன்றிகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago