2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

யாழில் பொங்கல் விழா

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாநகர சபையினால் எதிர்வரும் ஆண்டு 2012 ஆம் ஆண்டு மிகப் பிரமாண்டமான முறையில் மாபெரும் தைப் பொங்கள் விழாவை யாழ்.மாநகர சபை செய்யவுள்ளதாக மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.நாவலர் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விதம் குறிப்பிட்டள்ளார்.

தமிழரின் பாரம்பரிய கலை வடிவங்களை வெளிக்கொண்டுவரும் விதமாக இந்த தைப் பொங்கள் விழா தை மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் யாழ்.வர்த்தக சங்கத்தினர் ஒழுங்கு செய்துள்ளனர்.

யாழின் வரலாற்றுச் சிறப்புக்களை உழவர் திருநாளில் கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .